? ??????????????Dawn Stilled Water? ????? ?? ???Rating: 4.8 (4 Ratings)??409 Grabs Today. 4540 Total Grabs
. ??????Preview?? | ??Get the Code?? ?? ???????????????????Good Morning? ????? ?? ???Rating: 4.2 (57 Ratings)??321 Grabs Today. 16764 Total Grabs. ??????Preview?? | ??Get the Code?? BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS ?

Saturday, January 23, 2010

எதிர்பார்ப்பு..

உடை கழுவி,
வீடு கூட்டி,
சமைத்து களைத்து,
வெளியில் செல்ல பார்த்திருக்கும்
என் மனைவி..

வீடுக்குள்ளேயே சுழன்று,
அலுத்து அங்கலாய்த்து
விளையாட பார்த்திருக்கும்
என் மகன்..

கணணியோடு கட்டிப் புரண்டு
வேலை செய்து, சலித்து
ஓய்வெடுக்க வீடு செல்லும்
நான்..

பெண் விருப்பம்!

அவளிடம் விருப்பம் கேட்டு அவன் எழுதினான்...
என் கண்ணே!, மணியே!, முத்தே!,
நீ அழகிய பூ
நான் வண்டாகி உன்னில்
தேன் குடிக்க விரும்புகிறேன்!
நீ எனக்கு கிடைக்க இருக்கும்
மிக பெறுமதியான வைரம்..
உன்னை கண் கலங்காது
காப்பதுஎன் கடமை..
உன் விருப்பம் சொல்லி
என்னை தேனில் மூழ்கடி...

அவள் அவனுக்கு எழுதினாள்...
போடா நாயே!
ஆசை வார்த்தையில்
அடிமைத்தனம் கண்டேன்
பொய்களை நம்ப
பேதை அல்ல
பேசாமல் இருக்க
பூவும் அல்ல
நான் ஒரு "பெண்"!

நானும் வியாபாரி..

பார்த்துக்கொண்டிருப்பார்கள்
அதனால்தான்
அவசரமாய்..

முழுகி, முந்தானையில்
முழு உடல் துடைத்து,
முழங்காலுக்கும் திரவியம் இட்டு
முட்காட்டுக்குள் செல்ல தயாராகின்றேன்,,

என் ஒற்றை
ஒரு வயது குழந்தை அழுகிறான்
அரவணைத்து பால் கொடுத்து
முகம் கழுவி, திலகம் இட்டு
முத்தமும் கொடுத்து
கிழவியிடம் கையளித்து -பத்திரம்
என்று கூறி புறப்படுகிறேன்..

நான் செல்லும் பாதை
என் வாழ்க்கை போல
கரடு முரடானது தான்
என்று விளங்கித்தான்
புறப்பட்டேன் ..

என் பாதையில்
முட்கள் சிலவேளை
என் பாதத்தை பதம் பார்க்கலாம்
சில மரக்கிளைகளும்
என் அங்கம் பிய்த்து விளையாடலாம்
தெரிந்துதான் செல்கின்றேன்..

வழிமேல் விழி வைத்து பார்த்திருப்பார்கள் -
அந்த பாழ் வீட்டில்
பாடாய் படுத்துவார்கள்
ஒருவரல்ல மூவர் என்று
கேட்டும்தான் போகின்றேன்..

எனக்காய்
என் தாய்க்காய்
என் குழந்தைக்காய்
இப்படித்தான் அடிக்கடி
என்னை நான் விற்கின்றேன்.