உடை கழுவி,
வீடு கூட்டி,
சமைத்து களைத்து,
வெளியில் செல்ல பார்த்திருக்கும்
என் மனைவி..
வீடுக்குள்ளேயே சுழன்று,
அலுத்து அங்கலாய்த்து
விளையாட பார்த்திருக்கும்
என் மகன்..
கணணியோடு கட்டிப் புரண்டு
வேலை செய்து, சலித்து
ஓய்வெடுக்க வீடு செல்லும்
நான்..
Saturday, January 23, 2010
எதிர்பார்ப்பு..
Posted by kavithaikal at 10:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு. இவற்றிற்குள் ஒரு நதியைப்போல வளைந்து நெளிந்து ஓடுவதுதான் மனித வாழ்க்கை.
Post a Comment